பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமான நிலையில், மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளது
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை நாளை (25) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக உரியச் சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் ஆசிரியர் அல்லது அதிபருக்கு அறியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பெற்றோருக்கு கோரியுள்ளார்.






