பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரிக்குமானால் அது பாரிய பிரச்சினையாக மாறிவிடும் என்று, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்றாலும் தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிகப்படக் கூடாது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால், பேருந்து கட்டணங்கள் தொடர்பான பிரச்சினை ஏற்படும். கடந்த காலங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply