பசிலை துரத்தியடித்த விவசாயிகள்; சவப்பெட்டியுடன் வந்த தலைவர்கள்

உரப் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தம்புள்ளை, படகிரிய, ஹப்புத்தளை, மீரிகம, மெடதும்பர உள்ளிட்ட பிரதேசங்களில் இப் போராட்டங்கள் நடைபெற்றன.

தம்புள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் நடுவில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை போல் உடை மற்றும் முகமூடி அணிந்து வாகனத்தில் இருந்து ஒருவர் இறங்கும் போது போராட்டக்காரர்களால் அவர் அடித்து விரட்டப்படும் வகையில் எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை போன்று முகமூடி அணிந்த இருவர் சவப்பெட்டியை வைத்திருக்கும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply