ஆப்கான் சரிவை நோக்கிச் செல்கிறது: சுவீடன், பாகிஸ்தான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சுவீடனும், பாகிஸ்தானும் எச்சரித்துள்ளன.

அனைத்துலக் சமூகம் விரைந்து செயற்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் விரைவில் நிலைகுலைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் அவலச் சூழல் பயங்கரவாதக் குழுக்களின் கை ஓங்குவதற்கு வழியமைக்கலாம் என சுவீடனின் அபிவிருத்தி அமைச்சர் கூறியுள்ளார்.

தலிபான்களுக்கு சுவீடன் நிதியுதவி வழங்காது என கூறிய அவர் ஆப்கானிஸ்தான் குடிமைச் சமூகக் குழுக்கள் மூலம் மனிதநேய உதவிகளை அதிககரிக்கப் போவதாகச் தெரிவித்தார்.

இதேவேளை மானிடப் பேரழிவைத் தடுக்க தலிபான்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது மட்டுமே வழி என பாகிஸ்தான் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே கருத்தை வலியுறுத்தியுள்ள செஞ்சிலுவைச் சங்கம், உதவிக் குழுக்களால் தற்காலிகமாக மனிதநேய நெருக்கடியை மட்டுமே சமாளிக் முடியும் என்றும் தெரிவித்துள்ளது

அனைத்துலகச் சமூகம் தலிபான்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply