அரசாங்கத்திற்கு எதிராக இராகலை நகரில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இராகலை – உடபுஸலாவ பிரதான வீதியில் போராட்டம் ஆரம்பமாகி பிரதான வீதியில் ஊர்வலமாக இராகலை முருகன் ஆலயம் வரை சென்றடைந்தது.
அங்கு ஆலயத்திற்கு முன்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இராகலை வர்த்தகர்கள் கடைகளை மூடி ஆதரவு தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார்இ கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ பிரதேச சபை உறுப்பினர்கள்இ தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.






