பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் விலையை அறிவித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அரிசி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, நாட்டரிசி 15 ரூபாயும், சம்பா 10 ரூபாயும், கிரி சம்பா 30 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.
சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் அரிசிக்கு அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கியதை அடுத்து, அரிசி வியாபாரிகளின் விருப்பத்திற்கேற்ப அரிசியின் விலை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒரு கிலோ நாட்டு அரிசி ரூ.115 இற்கும், ஒரு கிலோ சம்பா அரிசி ரூ.140 இற்;கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி ரூ.165 இற்கும் வாங்கலாம் என கடந்த செப்டம்பர் 28ம் திகதி வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், நாடு, சம்பா, கீரி சம்பா அரிசி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மரண விசாரணை அதிகாரி!






