வவுனியாவில் இராணுவ பிக்கப் ரக வாகனத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ் விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து புகையிரத வீதி நோக்கி மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது, மக்கள் வங்கி முன்பாக நின்ற இராணுவ பிக்கப் ரக வாகனம் வீதியில் திடீரென திரும்ப முற்பட்டவேளை, மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






