அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பாரிய ஆர்ப்பாட்டமொன்று கண்டி நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இலவசக் கல்விக்கான மாணவர் இயக்கம் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன், பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை நீக்கவும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்கவும், மக்கள் எதிர்கொள்ளும் அதிக வாழ்க்கைச் செலவுகளுக்கு தீர்வுகளை வழங்குவது தொடர்பிலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.






