வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகளை, 150 இற்கும் அதிகமான சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து தாக்க முற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் செயலாளர் சுதேஸ் நந்திமால் சில்வா தெரிவித்துள்ளார்
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளை இன்று பார்வையிட்டமையைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் கடந்த ஒரு மாத காலமாக தமது உரிமையை பெற்றுத்தருமாறு கோரி கூரைகளில் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலைக் குற்றசாட்டுடைய கைதிகள் விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்வதான கருதியே சிறைச்சாலைகள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
ஆனால், அது உண்மைக்கு புறம்பான கருத்தாகும். கைதிகளின் கோரிக்கையாக அமைவது அவர்களுக்கு உரிய பொதுமன்னிப்பை வழங்குதலே ஆகும்.
துமிந்த சில்வாவை விடுதலை செய்ய முடியுமாயின் இவர்களையும் விடுதலை செய்ய முடியும்.
13 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அரசாங்கம் தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று கைதிகள் கூரைமீதேறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தருணத்தில் 150 அதிகாரிகள் அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
அதேபோல், ஆர்பாட்டத்தில் ஈடுபடும் கைதிகள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது சட்டத்திற்கு முரணான செய்பாடாகும். ஆர்பாட்டம் செய்யும் உரிமை அனைத்து தரப்பினருக்கும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.






