´கற்பித்தல் செயற்பாடுகள்´ முறையாக இடம்பெறும்- ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இன்று திங்கட்கிழமை முதல் 9இ100 க்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொரோனா தொற்று நிலை முழுமையாக நீங்கவில்லை என்பதனால்இ மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் செலுத்துவது அவசியமாகும்.

அத்துடன்இ பாடசாலை மாணவர்களுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின்இ அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சுஇ பெற்றோரிடம் கேட்டுக் கொண்டுள்ளதுஇ

மேலும்இ சிறுவர்களுக்கான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து வழங்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளைஇ பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறுவர்களின் போக்குவரத்தை கருத்திற் கொண்டுஇ போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும்இபாடசாலைகளை விட்டு வீட்டிற்கு வந்தவுடனேயேஇ குளித்தல் அவசியமாகும். அவ்வாறே ஆடைகளையும் உடனடியாக சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்க மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தற்சமயம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளைஇ இன்று தாம் சேவைக்கு சமூகமளிக்க இருப்பதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில்இ இன்று முதல் தமது ´கற்பித்தல் செயற்பாடுகள்´ முறையாக இடம்பெறும் என ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Leave a Reply