வவுனியா ஓமந்தை சிதம்பரநகர் பகுதியில் உள்ள தோட்டகாணியில் இருந்து கைக்குண்டுகளை பொலிசார் நேற்றையதினம் மீட்டுள்ளனர்.
குறித்த காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்திய போது நிலத்தில் புதையுண்ட நிலையில் இரு கைக்குண்டுகள் அவதானிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தபட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த கைக்குண்டுகள் நேற்றையதினம் செயலிழக்க செய்யப்பட்டது.






