அஸாத் ஸாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஸாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அஸாத் ஸாலி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் மாதம் 09 ஆம் திகதி அவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply