நீர்கொழும்பு, கொச்சிக்டை, மா ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என கொச்சிக்கடைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அம்பலயாய, கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






