பங்களாதேஷ் இந்துக்கள் மீது தாக்குதல்: இலங்கை இந்து அமைப்புக்கள் ஜ.நாவுக்கு கடிதம்!

பங்களாதேஷ் நாட்டில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என வலியுறுத்தி சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தலைமையில், இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்கள் ஜ.நா. மனித உரிமை ஆணையருக்கும், பபங்களாதேஷ் கொழும்பு தூதருக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

சித்திரவதைகள் மற்றும் குற்றங்கள் ப ங்களாதேஷ் இந்துக்களுக்கு இடம்பெறுகிறது. இந்துக் கோவில்கள், அவர்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்துக் கோவில்கள், வீடுகள் மற்றும் கடைகளை நாசமாக்குகிறார்கள். அவர்களின் அன்றாட உடைகள், பணம், தங்கம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்தக் குற்றங்களைத் தடுக்க உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி நேற்றுமுன்தினம் இக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை, இதுதொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி இந்தியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply