
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொவிட் தொற்றுக் காரணமாக நாள் மற்றும் நேரம் ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரிகளுக்காக சேவை வழங்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு இலக்கங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும் உரிய திகதியில் திணைத்தளத்திற்கு வந்து தங்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.





