எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரவுசெலவு திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply