நாட்டு மக்கள் விரும்பிய முறைமை மாற்றத்தையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தற்போது செயற்படுத்தி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு ஆதரவு வழங்கி செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.
ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், நேற்று நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி கருத்தொன்றை வெளியிட்டார்.
தவறுகளை திருத்தி நல்ல விடயங்களை செய்வதற்கும் தவறுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே நாட்டிலுள்ள 69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தனர் என்று, ஜனாதிபதி கோட்டாபய இதன்போது தெரிவித்தார்.
முறைமை மாற்றத்தை எதிர்பார்த்தே, இந்நாட்டிலுள்ள இளம் சந்ததியினர் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர். அந்த முறைமை மாற்றத்தையே ஜனாதிபதி தற்போது செயற்படுத்த முனைகின்றார்.
இந்த முறைமை மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் பாரிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.






