இரசாயன உரப் பயன்பாடு காரணமாக ஒவ்வொரு வருடம் 12,000 பேர் சிறுநீரக நோய்க்கு உள்ளகின்றனர் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இரசாயன உரப் பயன்பாட்டால் 10,000 பேர் மரணிக்கின்றனர்.இதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடைவித்தார்.
உரப்பிரச்சினை தொடர்பில் ஆங்காங்கே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, அரசாங்கத்தை சாடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிலும் அதிகளவு செய்திகள் வெளியாகி வருகின்றன.
நமது நாட்டுக்கு இரசாயன உரத்தை கொண்டுவந்து 60 வருடங்களுக்கும் மேலாகின்றது. 1960 இல் இருந்தே இரசாயன உர பயன்பாடு அறிமுகமானது. அதற்கு முன்பு இரசாயன உரம் என்றால் என்வென்று தெரியாத நிலைமையே காணப்பட்டது.
எனது தந்தையும் ஒரு விவசாயி. அவருக்கு இரசாயன உரம் என்றால் என்வென்று தெரியாது. ஆரம்பக் காலங்களில் இரசாயன உரம் என்றால் என்னவென்று எனக்கும் தெரியாது.
வயல்களில், விசாயக் காணிகளில் விசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காபனிக் உரத்தையே பயன்படுத்தி வந்தோம்.
எமது நாட்டில் ஆரம்பக் காலங்களில் காபனிக் உரப் பயன்பாடு மட்டுமே இருந்தது. 1960 களுக்குப் பின்பு இரசாயன உரப்பயன்பாட்டுக்கு நாம் மாறினோம்.
இரசாயன உரத்தைக் கொண்டுவந்து விவசாய சேவை மத்திய நிலையங்களில் வைத்து விவசாயிகளுக்க விநியோகித்தபோது இந்த உரம் எமக்கு தேவையில்லை என்று அப்போதிருந்த விவாசியகள் கூறியதாக அனுராதபுரத்தை சேர்ந்த விவாசாயி ஒருவர் எனக்கு தெரிவித்தார்.
ஏனெனில் விவசாய உரத்துக்கு அப்போது தேவைப்பாடு இருக்கவில்லை. எனினும் 60 வருடங்களுக்குள் இரசாயன உரப் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
60 வருடங்களாக பழக்கப்பட்ட ஒரு விடயத்திலிருந்து உடனடியாக மாறுவதற்கு கடினம். தற்போது நாட்டில் அந்தப் பிரச்சினையே ஓடிக்கொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நல்லெண்ணத்துடன் மேற்கொண்ட தீர்மானே இது என்பது தெளிவாக புரிகின்றது.
ஏனெனில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில், ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து நான் நன்கு விளங்கிக்கொண்டுள்ளேன்.
தற்போதைய நிலையில் 160,000 சிறுநீரக நோயாளர்கள் நாட்டில் உள்ளனர்.
சிறுநீரக நோய் ஏற்படுவதென்பது, வாழ்நாள் குறைவதற்கு காரணமாக அமையும்.
அதேபோன்று இரசாயன உரப்பயன்பாடு காரணமாக 30,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று ஒவ்வொரு வருடமும் புதிததாக 12,000 பேர் சிறுநீரக நோய்க்கு உள்ளாகின்றனர்.
அதேபோன்று ஒவ்வொரு வருடமும் 10,000 பேர் சிறுநீரக நோயால் உயிரிழக்கின்றனர்.
இந்த புள்ளிவிவரத் தகவலை பார்க்கும்போது நாம் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தார்.






