யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், ‘ஆசாதிகா அம்ரித் மஹோற்சவ்’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள இந்தியா முன்றலில் இந்தியச் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியை இன்று இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் மற்றும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி துணைத் தூதரக அதிகாரிகள், தலைமை நூலகர், நூலக அதிகாரிகள் மற்றும் நூலகத்தின் வாசகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் வழங்கப்பட்ட 50,000 புத்தகங்களுடன், இப்போது இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படத் தொகுதியையும் கொண்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், சுதந்திரத்திற்கு பின்னான வளர்ச்சி மற்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் வரலாற்று உறவுகளை இந்தியா முன்றல் தற்போது பறைசாற்றுகிறது.







