மொரட்டுவ பிரதேசத்தில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர், காருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும், கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.
இவ்வாறு திருடப்படுள்ள பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.






