அரசுக்குள் முரண்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை உள்ளேயே தீர்த்துக்கொள்ளுங்கள். வெளியில் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம், விவசாயிகளின் உரம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, அரசுக்குள் சில தரப்பினருக்கிடையே நிலவும் கருத்து மோதல்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டன.
மேலும், பிரச்சினைகள் ஏதேனும் இருக்குமாயின் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைக்காது, உள்ளேயே அவற்றை தீர்த்துக்கொண்டு, ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார் என கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.






