இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக இன்று குருநகர் மீனவர்களை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தமது பகுதி இழுவை மடி மீன்பிடி தொழிலுக்கு தடை விதிக்கக் கோருவதை எதிர்த்தும், ஒவ்வொரு இழுவைமடி மீன்பிடி படகும் மாதாந்தம் யாருக்கோ 5000 ரூபா கப்பம் செலுத்துகிறார்கள் என தெரிவித்தமைக்குக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடக்கும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தின் பிரதான மீனவர் அமைப்புக்கள் ஆதரவளிப்பதாக அறிய முடிகிறது.போராட்டம் தொடர்பில் சில மீனவர் அமைப்புக்களின் பிரமுகர்களை நேற்ற வினவியபோது, குருநகர் மீனவர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்படுவதாகவம், தாம் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இன்று 10 மணியளவில் , போராட்டம் இடம்பெறவுள்ளதுடன் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மையும் தீயிலிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
ஏற்கனவே சுமந்திரன் அணியினர் முல்லைத்தீவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு படகு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது






