முல்லேரியா பிரதேசத்தில் இன்று (26) காலை, இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், (42) மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 45 வயதான மற்றுமொருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கான காரணம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பான விசாரணைகளுக்காக, நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் பிரதேச குற்ற விசாரணைப் பிரிவு, மேல் மாகாண தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அத்துடன் மேலும் இரு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.