
நல்லூர் மாப்பாண முதலியாரின் நினைவாக, 92 பனம் விதைகள் நடுகை செய்யப்பட்டன.
92 ஆவது அகவையில் காலமாகிய நல்லூர் ஆலயத்தின் பத்தாவது நிர்வாகியான சிறீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நினைவாக, செம்மணி வீதியிலுள்ள நல்லூர் ஆலய வரவேற்பு நுழைவாயில் விதைகள் நடுகை செய்யப்பட்டன.
நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர், நல்லூர் பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர், ஆலய நிர்வாகத்தினர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.





