போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது!

கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் ஒரு மில்லியன் யூரோ மதிப்புள்ள போலி நாணயத்தாள்களுடன், பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட பொலிஸ் அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு இலங்கை விமானப்படையின் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான போலி நாணயத்தாள்களை தம்மிடம் வைத்திருந்ததாகவும், அதனை இலங்கை ரூபாய்க்கு மோசடியாக மாற்ற முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டுகொட யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது பெண்ணும் ஆணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply