திருமலைக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் வரவு அதிகரிப்பு .!

திருகோணமலை மாவட்ட கல்விவலயத்திற்கு உட்பட, பாடசாலை மாணவர்களின் வரவு அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுதல் காரணமாக மூடப்பட்டிருந்த ஆரம்பப் பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகள் நேற்று திங்கட்கிழமை (25) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மீளத்திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலைக் கல்வி வலயத்தின் கீழ் உள்ள 74 தமிழ் -சிங்கள மொழி மூல ஆரம்பப்பிரிவுப் பாடசாலை மாணவர்களின் வரவு இன்று அதிகரித்து காணப்பட்டுள்ளது.

அத்துடன், ஆரம்பப்பிரிவுப் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதுடன், மாணவர்களை கற்றலில் ஆர்வமூட்டவும், இழந்த கல்வியை மீட்டெடுப்பதற்கான செயற்பாடுகள் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் வழிகாட்டலின் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply