யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை! டக்ளஸ்

யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன்பிடியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராயும் வகையிலும், வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், அரச அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் இவ் விஜயத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட அமைச்சர் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன், வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம்.

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தவேண்டும். என்னை துரோகியாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தை கோரி நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply