பேலியாகொடவில் ஆணின் சடலம் மீட்பு!

கொழும்பு, பேலியாகொட வனவாசல வீதியில், அடையாளங்காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சடலம் இன்று பகல் மீட்டுள்ளதாக களனி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply