கிளிநொச்சியில் விவசாயச் செய்கைக்கு உரத்தை பெற்றுத் தருமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை சென்ற பேரணி மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்து.
அத்துடன், இலங்கை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் மகஜர்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
சேதனப் பசளை உரிய தரத்தில் கிடைப்பதில்லை. மாவட்டத்தில் 40 விதமான நிலம் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்று தருமாறு கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.








