வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் மரணம்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் வெ.மகேந்திரன் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்தார்.

வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மாதாந்த அமர்வுக்காக கடந்த மாதம் 24 ஆம் திகதி கூடிய போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் உபதவிசாளர் வெ. மகேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததுடன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply