கொரோனாத் தடுப்பூசி ஒன்றைக் கூட இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்கும் வகையிலான சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு எவரையும் வற்புறுத்த முடியாது. ஒவ்வொருவருக்கும் தமது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உள்ளது.
அதேவேளை, இன்னொருவரின் உயிரைப் பறிப்பதற்கு உரிமையில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசி ஒன்றைக் கூட இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்கும் வகையிலான சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார். ஐரோப்பாவிலும் இது போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.






