நாட்டில் மேலும் 14 பேர் கொரோனாவால் பலி!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 14 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,654ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 537,085 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504,003 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply