யாழ்ப்பாணம், வடமராட்சி அம்பன் பகுதியில் கைத்துப்பாக்கியின் சன்னங்கள் வைத்திருந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரிருக்கு நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பருத்தித்துறைப் பொலிஸார் குறித்த நபரை கைது செய்திருப்பதாக தெரியவருகிறது.
கைதானவரின் உடைமையிலிருந்தே சன்னங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வீதிப் புனரமைப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபடும் ஊழியர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் தொடராக ஒருவர் மற்றொருவர் குறித்து முறையிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






