சட்டவிரோதமாக காடழிப்பில் ஈடுபட்ட ஐவர் கைது!

புத்தளம் தப்போவ சரணாலத்திற்கு உட்பட்ட துத்தநேரிய பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பை மேற்கொண்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஹலபுளியங்கும், நீலபெம்ம மற்றும் பஹலபுளியங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, காடழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம், உழவு இயந்திரம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் சுமார் ஐந்து ஏக்கர் அளவில் காடுகளை அழித்துள்ளதாக கருவலகஸ்வௌ வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, இவ்வாறு காடுகளை தாம் துப்புரவு செய்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply