இரு நாட்டு நட்புறவுக்கும் பாதிப்பின்றி மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு! அரசாங்கம் அறிவிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினையை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தீர்ப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில், அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இந்திய அரசுடன் இலங்கை அரசு தொடர்ச்சியாகப் பேசி வருகின்றது.

ஆனால், துரதிஸ்டவசமாக இலங்கை, இந்திய கடல் எல்லைகள் அடையாளமிடப்படாத ஒன்றாக இருப்பதால், இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் தெரிந்தோ, தெரியாமலோ நுழைகின்றனர்.

எனினும், இந்த விடயத்தில் நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளைப் பாதுகாத்து, இராஜதந்திர ரீதியில் செயற்பட்டே தீர்வுகாண வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply