யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 08 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று 128 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் 03 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.






