இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் கோடரியால் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
காயமடைந்த இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத் தாக்குதலை நடத்திய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
இதுதொடர்பில், இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






