மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில், 6 கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது நடைபெறுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை, மல்லாகம் நீதிமன்றத்தில் நாளை முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






