நிராகரிக்கப்பட்ட, சீனாவின் 96 ஆயிரம் மெற்றிக்தொன் சேதன உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்காக மூன்றாம் தரப்பின் ஊடாக மற்றும் ஒரு பரிசோதனையை மேற்கொள்ள அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இரண்டு விவசாய அமைச்சர்களும், அமைச்சின் அதிகாரிகளும் நேற்று சீனத்தூதரகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில், மூன்றாம் தரப்பின் பரிசோதனையுடன், இந்த உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க அரசாங்கம் மேற்கொள்கிறது.
இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் இரண்டு ஆய்வக அறிக்கைகளையும் புறக்கணித்து, மற்றொரு பரிசோதனையை நடத்த இலங்கை அதிகாரிகள் இணங்கியிருந்தால் அது பாரதூரமான விடயம் என்றும் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என நளிந்த ஜெயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.






