புதுக்குடியிருப்பில் இராணுவம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் நாளை விடுவிப்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள்இ நாளை (28) விடுவிக்கப்படவுள்ளதாகஇ புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார்.

அதன்படிஇ இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் காணிகள்இ அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுஇ பின்னர் அது உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

யுத்தம் நிறைவடைந்துஇ மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போதுஇ புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகள்இ இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுஇ இராணுவ முகாம்
அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்இ தமது காணிகளை விடுவிக்கக் கோரிஇ கடந்த 2017ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

இதன் விளைவாகஇ ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன.

குறித்த காணியில்இ இராணுவத்தினரின் 682ஆவது படைப்பிரிவு முகாம்
அமைந்துள்ளது.

குறித்த முகாமை கைவேலிப் பகுதிக்கு மாற்றிவிட்டுஇ மிகுதி காணிகள் அனைத்தும் ஆறு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் இ தற்போது 7 ஏக்கர் காணிகளேஇ நாளை விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply