வடமராட்சியில் இடம்பெற்ற கோர விபத்து! குடும்பஸ்த்தர் பலி

யாழ்.வடமராட்சி நேற்றிரவு கப்புது வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கப்புது வீதியில் அமைந்துள்ள தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சையிக்கிளில் சென்ற நிலையில் இவ்விபத்து இடம்பெறுள்ளது.

40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இடத்தில், பால வேலைக்காக வெட்டப்பட்ட கிடங்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிக்ஞையையும் தாண்டி பாலத்திற்குள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

எனினும், அவசர ஆம்புலன்ஸ் சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply