அடையாளம் காணப்பட முடியாத வகையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

எட்டியாந்தோட்டை பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.

எட்டியாந்தோட்டை- மலல்பொல – அமுஹேன பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட முடியாத வகையில், சடலம் பழுதடைந்துள்ளதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த ருவன்வெல்ல பதில் நீதவான் நிமல் புஸ்பகுமார, மரண விசாரணையை நடத்தியதுடன், நேற்றைய தினமே சடலம் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது குறித்த சடலம், வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இச்சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply