
செ. டிருக்சன்
கடற்றொழில் நீரியல் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (2021.10.27) மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் செய்தார்.
அதனடிப்படையில் கல்முனையில் அமைந்துள்ள கடற்றொழில் திணைக்கள அலுவலகத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மீனவசங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை விரைவாக பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார். இன்று அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.





