கொரோனாத் தொற்று பரவல் நாட்டில் அதிகரித்துள்ளது. சுகாதார வழிகாட்டல்களை முறையாக பேணிவருவதற்கு தவறினால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகமானவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் அதனை முறையாக அணிவதில்லை.
குறிப்பாக திருமண நிகழ்வுக்களுக்கு அனுமதி வழங்கி, அதில் ஒன்றுகூடுவதற்கு 100 முதல் 150 பேருக்கு தற்போது அனுமதி வழங்கி இருக்கின்றோம்.
கொரோனா தொற்று எமது நாட்டில் இருந்தும் உலகில் இருந்தும் இன்னும் பூரணமாக நீங்கவில்லை. அதனால், மக்கள் மிகவும் அவதானமாகவே தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.
மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டிவரும். அதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிவரும். என்பதை மக்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்; என அவர் எச்சரித்துள்ளார்.






