வலி. மேற்கு பிரதேச சபை அமர்வில் நடந்தது என்ன?

வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு உப தவிசாளர் சச்சிதானந்தன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது .

இதன்போது கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் விஜிமருதன், இரண்டு சபை அமர்வுகளுக்கு காணவில்லை. அவருக்கு தொடர்பு ஏற்படுத்தினாலும் போன் ஆப் செய்யப்பட்டுள்ளது அவருடைய தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார்.

எனினும் இதற்கு பதிலளிக்காத உப தவிசாளர் சபை நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துள்ளார்.

என்ற பொதும் தவிசாளர் சபை அலுவலக நடவடிக்கைகளுக்கு கடந்த தினங்களில் சமூகமளித்து இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து அறிக்கை தொடர்பான விவாதத்தில் உறுப்பினர்கள்இ தாம் கதைக்கும் விடயங்கள் குறித்த அறிக்கையில் இடம்பெறவில்லைஇ இதற்கான காரணம் என்ன? முக்கியமான விடயங்கள் தான் இடம்பெற வேண்டுமாயின் அதற்கான ஒரு தீர்மானங்களை எடுங்கள் என சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு உப தவிசாளர் ஏற்கனவே இது தொடர்பில் தீர்மானம் இருப்பதாகவும் சாராம்ச விடயங்களே அறிக்கையில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிக்கை தொடர்பான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெண் உறுப்பினர்இ செயலாளர் ஒரு முறை எனது வீட்டிற்கே வந்து கையெழுத்து வேண்டியதாக சபையில் தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனத்தை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்இ செயலாளர் பெண் உறுப்பினரின் வீட்டிற்கு செல்வது கண்டிக்கத்தக்க செயல் எனவும்இ அவ்வாறு செல்லக் கூடாது எனவும்இ அதற்கான தேவை எழக் கூடாது எனவும் சபையில் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுழிபுரம் வட்டார உறுப்பினர் இருதயகுமாரன் (ஐசரனாயலயமரஅயயசயn) ‘நான் நல்ல காலம் பெண்ணாக பிறக்கவில்லை’ என கூறியுள்ளார்.

இதற்கு அவரின் அருகில் இருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்இ நாங்களும் பெண்கள் தான் நீங்கள் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. உடனடியாக குறித்த பகிரங்க சபையில் நீங்கள மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதற்கு இணங்க சபையில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply