மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னாரில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’ எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் குறித்த இரத்தான முகாம் இடம்பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய பணியாளர்கள், வைத்தியர்கள், வைத்திய சாலை பணியாளர்கள் கலந்து கொண்டதுடன், பலர் ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர்


மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிவரும்! மக்களுக்கு எச்சரிக்கை






