கொரோனாவால் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாய் இழப்பு!

நாட்டில் கொரோனா காரணமாக இவ்வருடத்தில் அரசாங்கம் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாயை இழந்திருப்பதாக மதுவரி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.

மதுவரித் திணைக்களத்தால் இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 160 பில்லியன் ரூபாவாக இருக்கின்றபோதும், இந்த இலக்கை எட்டுவது சிரமமாக இருக்கும் என பணிப்பாளர் நாயகம் குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

மதுவரித் திணைக்களம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தால் தயாரிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கை மற்றும் அத்திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்து பார்க்கும் நோக்கில் கடந்த 22 ஆம் திகதி கோபா குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

மேலும், அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மதுப் போத்தல்கள் மற்றும் மதுப்போத்தலுடன் தொடர்புபட்ட உற்பத்திகளுக்கு பாதுகாப்பான ஸ்டிக்கர்களை வழங்குவது மற்றும் பாதுகாப்பான ஸ்டிக்கர் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் காலதமாதமடைவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply