கொரோனாத் தெற்றின் தீவிரம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பிசிஆர் ஆய்வுகூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பிசிஆர் பரிசோதனை ஒன்றுக்காக 40 அமெரிக்க டொலர் கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை முடிவுகளை மூன்று மணித்தியாலங்களுக்குள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்த பயணிகளுக்கு முதல் தடவையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.






