வவுனியாவில் காணாமற்போனோரின் உறவுகள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது கோரிக்கையை முன்வைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளால் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 1,714 ஆவது நாளாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அவசர கால சட்டத்தை நீக்கக் கோரியும் தமது போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், இந்தியா உட்பட்ட நாடுகள் எமக்கு உதவி செய்து, இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.








