விநாயகபுரம் பிரதான பகுதியுள்ள நகைக்கடை ஒன்றில்இ பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் தொடர்புடைய நபரொருவரைஇ சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெறுள்ளது.
மேலும் தெரியவருவதுஇ
நேற்று பிற்பகல் நகைக் கடைக்குள் நுழைந்த சந்தேகநபர்இ கடையில் இருந்த நபருக்கு மிளகாய்த் தூள் விசிறி நகைகளைக் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார்.
இதன்போதுஇ நகைக் கடையில் இருந்த நகைக்கடை உரிமையாளரின் மருமகனுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் சண்டையிடும் காட்சிகள்இ அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளன.
எனினும் கடை உரிமையாளர்இ பொதுமக்கள் இணைந்து குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.இ
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்இ சந்தேக நபரை கைது செய்துள்ளதுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.






